ADVERTISEMENT

ஜி.டி.பி மதிப்பு அதிகரிக்குமா? மத்திய அரசின் ஆய்வறிக்கை என்ன சொல்கிறது?

01:56 PM Jul 04, 2019 | santhoshb@nakk…

நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கையை மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி (GDP- 'GROSS DOMESTIC PRODUCT') 7% சதவீதமாக இருக்கும். 2019-20 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% சதவீதமாகவும், கடந்த நிதி ஆண்டில் பற்றாக்குறை 5.8% சதவீதமாகவும் இருந்தது என கணிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் காரணமாக பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

2025 ஆம் ஆண்டில் 5 லட்சம் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற, இந்தியா மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 8% ஆக வைத்திருக்க வேண்டும். அதே போல் பொது நிதி பற்றாக்குறை கடந்த நிதியாண்டில் 5.8% ஆக இருந்தது. இது 2019- ஆம் ஆண்டு நிதியாண்டில் 6.4% ஆக இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பொருளாதார ஆய்வறிக்கை குறித்து இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT