மாநிலங்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு என அறிவித்துள்ள அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, மாநிலங்களவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
அக்டோபர்- 1 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த நிலையில் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது மழைக்கால கூட்டத்தொடர். எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நிலையில் மாநிலங்களவை கூட்டத்தொடர் 10 நாட்களுடன் நிறைவு பெற்றது.
கடைசி இரண்டு நாளில் 14 மசோதாக்கள் என 10 நாளில் 25 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது. மாநிலங்களவையில் கடைசி நாள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.