சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்.பி.க்கள் 8 பேர் நாடாளுமன்ற வளாகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற மறுத்து காந்தி சிலை முன் தர்ணா போராட்டத்தை தொடருகின்றனர்.
இதனிடையே, இரண்டாவது நாளாக தர்ணா செய்யும் எம்.பி.க்களுக்காக 'டீ' கொண்டு வந்தார் மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ். அவர் கொடுத்த 'டீ' யை எம்.பி.க்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
விவசாய மசோதாக்களை நிறைவேற்றியபோது ஹரிவன்ஸுக்கு எதிராக அமளி செய்ததால்தான் 8 எம்.பி.க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.