சிகரெட், பீடி போன்றவற்றுக்கு மாற்றாக உலக அளவில் இ-சிகரெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. தொடக்கத்தில் அதிக ஆபத்தில்லாதவை எனக் கூறப்பட்டாலும், பல்வேறு ஆய்வுகளின் முடிவில், புகையிலை சிகரெட்டுக்கு நிகரான தீங்குகள் இந்த இ-சிகரெட்டாலும் ஏற்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் நாடு முழுவதும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கும் மசோதா நாடாளுமன்ற மக்களவையில், கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், மாநிலங்களவையில் இன்று இ- சிகரெட்டிற்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.