Advertisment

இந்தியாவில் 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு- மத்திய சுகாதாரத்துறை தகவல்!

parliament mp questions ministry of health and family welfare

Advertisment

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இதில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்மந்தப்பட்ட துறையைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் சின்ஹா, எய்ட்ஸ் நோயாளிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளது.

அதில், 2019- ஆம் ஆண்டு அறிக்கைப்படி இந்தியாவில் மொத்தமாக 23.49 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE Delhi Parliament
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe