இந்திய நாட்டின் 73- வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்கள், விமான நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/PARLIAMENT HOUSE1.jpg)
அதனை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டனர். காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போது நாடாளுமன்றம் இதே போன்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.வண்ண ஒளியில் மிளிரும் நாடாளுமன்றம் காண்போரை கவர்ந்தது.
Follow Us