டெல்லியில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் பாஜக எம்பிக்களுக்கு வழங்கப்பட்ட பதவிகள் குறித்த பட்டியல் வெளியானது. பாஜக சார்பில் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதே போல் பிரதமர் தலைமையில் நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் தேசிய தலைவராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நியமனம். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவை குழு துணை தலைவராக தேர்வ் செய்யப்பட்டார்.

Advertisment

BJP LEADERS LIST

Advertisment

பாஜக சார்பில் மாநிலங்களவை குழு தலைவராக தாவர் சந்த் கெலாட் தேர்வு. மாநிலங்களவை குழு துணைத் தலைவராக மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் துறை அமைச்சர் பியூஸ் கோயலை தேர்வு செய்தது பாஜக உயர்மட்டக் குழு. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பாஜக சார்பில் அரசு கொறடாக்கள் மற்றும் துணை கொறடாக்கள் என பாஜக கட்சியை சேர்ந்த 50 எம்பிக்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.