கோவா மாநில முதல்வரான பா.ஜ.க வின் மனோகர் பாரிக்கர் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். இந்நிலையில் கோவா மாநிலத்தில் முதல்வர் சரியாக செயலாற்றாததால் நிறைய குழப்பங்கள் ஏற்படுகின்றன, எனவே பாரிக்கரின் உடல்நிலை குறித்த தகவல்களை ரகசியம் காக்காமல் வெளியிடவேண்டும் என காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தில் கோரியது.
இதற்கு இன்று பதில் மனு தாக்கல் செய்த கோவா தலைமை செயலாளர் தர்மேந்திர சர்மா, முதலமைச்சர் என்ற ஒரு காரணத்திற்காக ஒரு தனி மனிதனின் ஆரோக்கியம் போன்ற தனிப்பட்ட விஷயங்களை பொது வெளியில் கூற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இந்திய சட்ட விதி 21 ன் படி இது சட்ட விரோதம். எனவே அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பற்றி கூற முடியாது. மேலும் முதல்வர் தனது பணிகளை சிறப்பாக செய்து வருகிறார் என கூறியுள்ளார்.