Advertisment

காதல் ஜோடியை முதலைக்கு உணவாக்கிய பெற்றோர்; விசாரணையில் அதிர்ச்சி

 Parents who feed a loving couple to a crocodile; Shocked at the trial

Advertisment

பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலனுடன் சென்ற இளம்பெண் மற்றும் அவரது காதலன் இருவரையும் பெண்ணின் பெற்றோரே கொலை செய்து அவர்களது உடலை ஆற்றில் இருக்கும்முதலைகளுக்கு உணவாகப் போட்ட சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மத்தியப் பிரதேசமாநிலம் மோரினா மாவட்டத்தில் உள்ளது ரதன்பாஸாய் எனும் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஷிவானி தோமர் என்பவர் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த ராதேஷ்யம் தோமர் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இளம்பெண்ணும் அந்த இளைஞரும் ஒருநாள் திடீரென காணாமல் போயினர். ‘தனது மகனையும், அவர் காதலித்து வந்த பெண்ணையும் காணவில்லை.இருவரையும் கண்டுபிடித்து தாருங்கள்’ என இளைஞரின் தந்தைபோலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக இளம்பெண் ஷிவானி தோமரின் போற்றோர் மற்றும் உறவினர்களை போலீசார் விசாரித்து வந்தனர். போலீசார் ஷிவானியின் தந்தை உள்ளிட்டவர்களை விசாரித்த பொழுது அந்த அதிர்ச்சி தகவல் கிடைத்தது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி ஷிவானியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஒன்று சேர்ந்து ஷிவானி மற்றும் ராதேஷ்யம் தோமர் ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரது உடலையும் கல்லைக் கட்டி சம்பல் நதியில் ஆயிரக்கணக்கான முதலைகள் உள்ள இடத்தில் உணவாக வீசியுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

incident MadhyaPradesh crocodile
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe