இறந்த குழந்தைகளின் உடல்களை சுமந்து சென்ற பெற்றோர்கள்; மருத்துவ வசதியில்லாததால் நேர்ந்த அவலம்!

parents who carried the bodies of their children in maharashtra

மருத்துவ வசதியில்லாத காரணத்தினால், இறந்த மகன்களின் உடல்களை 15 கி.மீ சுமந்துகொண்டு நடந்த அவலம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பட்டிகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தம்பதியினர். இவர்களுக்கு 6 மற்றும் 3 வயது கொண்டு இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் நேற்று (04-09-24) கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தாங்கள் கிராமத்தில் சரியான சுகாதார வசதிகள் இல்லாததால், பெற்றோர்கள் தங்கள் குழந்தகளை உள்ளூர் வைத்தியரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவர், சில மூலிகை மருந்துகளை கொடுத்துள்ளார். ஆனால், இரு குழந்தைகளின் நிலைமையும் நேரம் ஆக ஆக மோசமடைந்தது. இதனால், தாங்கள் வசித்து வரும் கிராமத்திலிருந்து ஜிம்லாகட்டாவில் உள்ள சுகாதார நிலையத்தில் குழந்தைகளை காண்பிக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஆனால், இரு ஊரையும் இணைக்கும் வகையில் நடைபாதை சாலை இல்லாததாலும், அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததாலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுமார் 15 கி.மீ தூரம் வரை தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்துகொண்டு நடந்து சுகாதார நிலையத்தை அடைந்தனர். நீர் தேங்கிய பகுதிகள், சேற்றுப் பாதைகள் வழியாக வந்த அவர்கள் கொண்டு வந்த குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இறுதியில் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டாலும், துக்கமடைந்த பெற்றோர் அந்த உதவியை மறுத்துவிட்டு தங்கள் குழந்தைகளின் உடல்களை தோளில் சுமந்துகொண்டு நடந்தே வீட்டிற்குத் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

incident Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe