Parents took their daughter treatment by floating on a bamboo boat river

நமது தேசத்தில் சரியான போக்குவரத்து வசதி இல்லாததால், ஆபத்தான நேரங்களில் கூட,அவசர உதவிகிடைக்காமல், மக்கள் எந்த அளவுக்கு அவஸ்தைப்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

Advertisment

தெலங்கானா மாநிலம், பார்வதிபுரம் மன்யம் மாவட்டம்,கொரமடாவைச் சேர்ந்த பழங்குடியின சிறுமி (வயது 7) மாரியம்மாவுக்கு திடீரென கடுமையான காய்ச்சலும் வலிப்பும் ஏற்பட்டது. மகளது நிலையைக்கண்ட பெற்றோர் பரிதவித்தனர். எப்படியாவது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

Advertisment

மருத்துவமனைக்குச் செல்லவேண்டுமென்றால், தெலுங்கானா மாநில எல்லைக்கும் ஒடிசா மாநிலஎல்லைக்கு இடையிலுள்ள நாகவலி ஆற்றினைக் கடந்து செல்லவேண்டும். தற்போது பெய்துவரும்கனமழையினால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றைக் கடந்து செல்வதற்கோ, படகு வசதி எதுவும் இல்லை. மகளைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற கவலையின் உந்துதலால், அவளுடைய பெற்றோர் மூங்கிலை வெட்டி அவசர அவசரமாக ஒரு தற்காலிகப் படகு செய்தனர். மகளைத் தூக்கி மடியில் கிடத்தி,அந்தக் கடும் வெள்ளத்திலும் போராடியபடி, அக்கரையை அடைந்தனர்.

அதன்பிறகு, 17 கி.மீ தூரம் மகளை தோளில் சுமந்தவாறே ஒடிசா மாநிலம் ராயகடாவிலுள்ள அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நமது தேசத்தில் நடக்கின்ற இதுபோன்ற கொடுமையானசம்பவங்களைப் பார்க்கும்போது, டிஜிட்டல் இந்தியா என்ற பெருமிதம், சுக்குநூறாக உடைந்து போகிறது.