Advertisment

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு இறந்த பின் சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்

The parents married the idol after he died after protesting the love

காதலிக்கும் பொழுது திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டு காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட பிறகு அவர்களது சிலைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

குஜராத் மாநிலம் தாபியில் கணேஷ் என்ற இளைஞனும் ரஞ்சனா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வேண்டும் என காத்திருந்தனர். ஆனால் இறுதி வரை இரு தரப்பு பெற்றோர்களும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மனம் வாடிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Advertisment

இந்நிலையில் தற்பொழுது காதல் ஜோடிகள் ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் போனதற்கு தாங்கள் தான் காரணம் என வருந்திய குடும்பத்தினர் அவர்களது சிலைகளை தத்ரூபமாக செய்து அவற்றுக்கு திருமணம் செய்து வைத்தனர். உயிருடன் இருக்கும் பொழுது சேர்த்து வைக்காமல் இறந்த பிறகு சிலை செய்து திருமணம் செய்து வைக்கப்பட்ட இந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

love Gujarath
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe