style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
உத்தரபிரதேசத்தில்ஆறுவயது சிறுமியை பெற்றோர்களே மர்மமாககொலை செய்து வீட்டில் புதைத்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம்மாநிலம் மொராதாபாத்தில் தாரா எனும் ஆறு வயது சிறுமி பெற்றோர்களால் கொலை செய்யப்பட்டு நடுவீட்டில் புதைக்கப்பட்டுதுள்ளதாககேள்விப்பட்டு அந்த குழந்தையின் உறவினர்கள் போலீசில் புகார்கொடுத்துள்ளனர். இந்த புகாரை ஏற்றுக்கொண்டு போலீசார் அவரது பெற்றோர்களிடம் விசாரித்தனர்.
அந்த விசாரணையில் அந்த சிறுமியின் தாய் எனது மகள் ''தாரா'' தீராத உடல்நல குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்தாள். எனவே அவளை கருணை கொலை செய்துவிடுங்கள் என சிலர் கூறினர். அப்படி செய்தால்தான் உங்கள் அடுத்த குழந்தையாவது பிழைக்கும் என கூறினர் எனவே அவ்வாறு செய்தோம் என தெரிவித்துள்ளார்.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
அதேபோல் அந்த சிறுமியின் பாட்டி விசாரணையில், தாரா தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுக்கு நாங்கள் பார்க்காத மருத்துவமே இல்லைஎனவே அந்த அவதியில் இருந்து அவளை மீட்கமுடியாமல்கருணைக்கொலை செய்து யாருக்கும் தெரியாமல் வீட்டில் புதைத்தோம். மேலும் அவளை புதைத்த இடத்தில் ஒரு கோவில் எழுப்பி கும்பிடலாம் எனவும் நினைத்தோம் என கூறியுள்ளார்.
இதனை அறிந்த போலீசார்அந்த வீட்டில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தைதோண்டி சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேதாபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் பிரேதபரிசோதனை அறிக்கையில் குழந்தையின் வயிற்றில் உணவின் சிறு பருக்கைகூட இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து, நன்றாக இருந்த சிறுமியை வேண்டுமென்றே பட்டினிபோட்டு கொலை செய்துள்ளனரா? அல்லது மாந்த்ரீக கொலையா? என போலீசார் அவர்களை கைது செய்து பல்வேறு கோணங்களில்விசாரித்து வருகின்றனர்.