Advertisment

காதலித்த மகளை அடித்து கொலை செய்த பெற்றோர் கைது! 

Parents arrested for beating daughter to death

வேறு சாதி இளைஞரைக் காதலித்த கல்லூரி மாணவியை, அவரது பெற்றோர் அடித்துக் கொலை செய்துள்ளனர்.

Advertisment

கர்நாடகா மாநிலம், பிரியப்பட்டணாவைச் சேர்ந்த ஷாலினி என்ற கல்லூரி மாணவி, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்து வந்துள்ளார். இளைஞர் வேறு சாதி என்பதால், ஷாலினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், ஷாலினி தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாலினியின் பெற்றோர், தனது மகள் என்றுகூட பாராமல், அவரை அடித்துக் கொலை செய்துள்ளனர்.

Advertisment

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், ஷாலினியை அவரது பெற்றோரே கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, பெற்றோரை கைது செய்த காவல்துறையினர், சிறையில் அடைத்தனர்.

incident Women karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe