பிரதமர் மோடியை போலவே உருவத் தோற்றம் கொண்ட ஒரு முதியவர் பானிபூரி விற்று வரும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகத்தில் ஒருவரைப்போல் ஏழு பேர் இருப்பார்கள் என்பது உண்மையோ பொய்யோ ஆனால் இணையதளங்களில் பிரபலங்கள் மற்றும் நடிகர்களைப் போல உருவ தோற்றங்களை கொண்டவர்கள் அதை சற்று நிரூபித்தும் வருகின்றனர். அந்த வகையில் குஜராத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் பிரதமர் போலவே தோற்றமளிக்கும் நிலையில், அவரைப் போலவே உடை உடுத்திக்கொண்டு பானிபூரி விற்று வருகிறார். அவர் கடைக்கு சென்று பானிபூரி சாப்பிடுபவர்கள் அவரை வீடியோ எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். ''எப்புட்றா...''என நெட்டிசன்கள் கமெண்டுகளை தட்டிவிட்டாலும், மறுபுறம் வியாபாரமும் களைகட்டுகிறதாம் அந்த பானி பூரி கடையில்.