ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் மன்கோட் மற்றும் கிருஷ்ணா காதி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர்நிறுத்தத்தை மீறி இந்திய எல்லைக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
Advertisment
காலை முதல் பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் 5 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பூஞ்ச் மாவட்ட ஆணையர் ராகுல் யாதவ் தெரிவித்துள்ளார்.