தமிழக மீனவர்களைக் கைது செய்த பாகிஸ்தான் கடற்படை

Pakistan Navy arrested Tamil Nadu fishermen

தமிழக மீனவர்கள் ஆறு பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்திருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் குஜராத்தில் மீன்பிடி தொழில் செய்வதற்காக சென்றிருந்தனர். கடந்த 18ஆம் தேதி காசிமேடு மீனவர்கள் குஜராத் சென்றிருந்தனர். போர்பந்தரில் இருந்து ஆள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறு தமிழக மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது தமிழக அரசியல் களத்தில் பல்வேறு கண்டனங்களை உருவாக்கி வரும் நிலையில், தற்போது சென்னையைச்சேர்ந்த தமிழக மீனவர்கள் குஜராத்திற்கு மீன் பிடிக்க சென்ற இடத்தில்பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Pakistan Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe