rajouri

Advertisment

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இருந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளது. சுந்தெர்பெனி செக்டாரில் நடத்தப்பட்ட இந்த அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் அத்துமீறிய இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.