பாகிஸ்தான் எல்லைமீறித் தாக்குதல்... பொதுமக்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழப்பு!

 Pakistan cross-border attack

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் 3 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பூஜ்ச், கெரன்உள்ளிட்ட இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகவும் அதற்குஇந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின், இந்த அத்துமீறல் தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். உரிஎன்னும் இடத்தில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் ராணுவ வீரர்கள் இருவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல்பாராமுல்லா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை உதவியாளர் உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த அத்துமீறல் தாக்குதலை அடுத்துபாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்திய ராணுவம் பதில்தாக்குதல் நடத்தியதில், 8 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

indianarmy. kashmir Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe