Published on 01/03/2019 | Edited on 01/03/2019

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானத்தை துரத்திச் சென்ற இந்திய விமானப்படை விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்திலிருந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் அவர் பாகிஸ்தான் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது இந்திய எல்லையை அவர் வந்தடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ராஜ்யோரி மாவட்டத்தில் உள்ள நொவ்ஷேரா பகுதியில் இன்று மாலை 4.15 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு இந்திய இராணுவம் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.