ன்1

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

பனாமா பேப்பர் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீபுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

ஊழல் பணத்தில் லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியதாக நவாஸ் ஷெரீப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. குற்றச்சாட்டுக்குள்ளான நவாஸ் ஷெரிப் கடந்த ஆண்டு பிரதமர் பதவி்யில் இருந்து நீக்கப்பட்டார்.

பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றம் அவரது மகள் மரியம் ஆகிய இருவரும் லண்டனில் இருந்து அபிதாபி வழியாக பாகிஸ்தான் திரும்பிய நிலையில் 2 பேரும் கைதாகியுள்ளனர். அவர்களது பாஸ்போர்ட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment