கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீகந்த கவுடா தனது பயிர்களை குரங்குகளிடம் இருந்து காக்க வித்தியாசமான ஒன்றை செய்து வைரலாகியுள்ளார். உத்தரா கன்னடா மாவட்டத்தில் பயிர்களை காக்க புலிகளின் பொம்மையை பயன்படுத்தியதை அறிந்து அதேபோல் செய்துள்ளார். புலி பொம்மைகளை வயலிவெளியில் வைக்க குரங்குகளும் பயந்து சென்றுவிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgj_2.jpg)
ஆனால், புலி பொம்மை ஐடியா பல நாட்களுக்கு குரங்குகளிடம் வொர்க் அவுட் ஆகாது என்பதால் வேறு ஒரு ப்ளான் போட்டுள்ளார். இந்த ப்ளானால் தற்போது வைரலாகி உள்ளார்.ஸ்ரீகந்த கவுடா தனது வீட்டில் இருந்து நாயை புலி போல தயார் செய்துள்ளார். முடிக்கு பூசப்படும் டையை வாங்கி நாய்க்கு பூசி அதனை புலி ஆக்கியுள்ளார். மேலும் இந்த டை ஒரு மாதம் வரை போகாது என்றும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)