Advertisment

மறைந்த பாடகர் எஸ்.பி.பி., ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு!

Padma Vibhushan award for 7 including late singer SBP, former Prime Minister of Japan Shinzo Abe!

Advertisment

இந்திய குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி க்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உட்பட ஏழு பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Padma Vibhushan award for 7 including late singer SBP, former Prime Minister of Japan Shinzo Abe!

Advertisment

அதேபோல் மக்களவை முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த லோக் ஜன சக்தி கட்சி நிறுவனர்ராம்விலாஸ் பஸ்வானுக்குபத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.அசாம் முன்னாள் முதல்வர் (மறைந்த) தருண் கோகாய்க்குபத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் முன்னாள் முதல்வர் மறைந்த கோஷூபாய்பட்டேலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டிமன்றம் நடுவர் சாலமன் பாப்பையாவுக்குபத்மஸ்ரீ விருதுஅறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறையில் புகழ்பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பாப்பாம்மாளுக்குபத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, சமூக சேவகர் சுப்புராமன் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஐந்து ரூபாய் மருத்துவர்' என்று அழைக்கப்படும் மறைந்த மருத்துவர் திருவெங்கடம் வீரராகவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனை அனிதாவுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த கேசவசாமி, இசைக்கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பு ஆறுமுகம் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Central Government padma awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe