Advertisment

பத்ம ஸ்ரீ விருது பெற்ற வேளாண் விஞ்ஞானி மர்ம மரணம்!

Padma Shri awardee agricultural scientist Subbanna Ayyappan passed away

Advertisment

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுப்பண்ணா ஐயப்பன்(69) பிரபல வேளாண்மை மற்றும் மீன்வள விஞ்ஞானியாக இருந்து வந்தார். இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட நீல புரட்சியில் பெறும் பங்கு வகித்தவராக கருதப்படும் சுப்பண்ணா ஐயப்பன் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஏஆா்) முன்னாள் தலைமை இயக்குநராகவும் இருந்து இருக்கிறார். மத்திய அரசு இவரது சேவையை பாராட்டும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு சுப்பண்ணா ஐயப்பனுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இதனைத் தொடர்ந்து, சுப்பண்ணா ஐயப்பன் கர்நாடக மாநிலம் மைசூர் விஸ்வேவரய்யா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் கடந்த 8 ஆம் தேதி திடீரென மாயமாகியுள்ளார். குடும்பத்தினர் எங்குத் தேடியும் சுப்பண்ணா ஐயப்பன் கிடைக்காததால், இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் விஞ்ஞானி சுப்பண்ணா ஐயப்பன் உடல் காவிரி ஆற்றில் சடலமாக மிதந்து வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சுப்பண்ணாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சுப்பண்ணா ஐயப்பன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது செருப்புகள் மற்றும் இரு சக்கர வாகனம் ஆற்றின் கரையில் இருந்ததையும் போலீசார் கண்டுப்ப்டித்துள்ளனர். ஆனால் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

karnataka padma shri police
இதையும் படியுங்கள்
Subscribe