Advertisment

பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம்!

padma awards ministry of home affairs announcement

Advertisment

பத்ம விருதுகளுக்கானப் பரிந்துரைகளை செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில், "1954- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள் மற்றும் சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.

அதன்படி, 2022- ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை செப்டம்பர் 15- ஆம் தேதி வரை அனுப்பலாம். https://padmaawards.gov.in என்ற இணைய தளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இது குறித்த மேலும் தகவல்களை www.mha.gov.in என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Announcement MINISTRY OF HOME AFFAIRS padma awards
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe