Advertisment

விமானப் படையின் துணைத் தளபதி கருத்துக் கூற மறுத்துவிட்டார்- ப.சிதம்பரம்...

dfghdfghf

புல்வாமா தாக்குதலுக்கும் பதில் தாக்குதலாக இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது. இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியாவும் இதனை மறுத்தார். இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர் பதிவுகளை பதிவிட்டுள்ளார். அதில், "இந்திய விமானப் படையின் வீர நடவடிக்கையைப் பாராட்டிய முதல் மனிதர் திரு ராகுல் காந்தி என்பதை பிரதமர் மோடி மறந்து விட்டார். விமானப் படையின் துணைத் தளபதி உயிர் இழந்தோர் எண்ணிக்கை பற்றி கருத்துக் கூற மறுத்து விட்டார். 300/350 பேர் உயிரிழந்தார்கள் என்ற செய்தியை யார் பரப்பியது? இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன். ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? அதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு? என பதிவிட்டுள்ளார்.

Advertisment

P chidambaram pulwama attack
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe