ADVERTISEMENT

"மோடி அரசுக்கு நினைவுபடுத்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி" - பா.சிதம்பரம் ட்வீட்

10:27 AM Feb 18, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்தத் தேர்தல் முடிவுகள் நேற்று (17.02.2021) அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

பஞ்சாபில் மொத்தமுள்ள 8 மாநகராட்சிகளில், 6 மாநகராட்சிகளைக் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இவற்றுள் பதிந்தா மாநகராட்சியில் 53 வருடங்களுக்குப் பிறகு காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. மேலும் ஒரு மாநகராட்சியில் தனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுத்துள்ளது. ஒரு மாநகராட்சியில் இன்று முடிவு அறிவிக்கப்படவுள்ளது. 2,165 நகராட்சி வார்டுகளில் 1,399 வார்டுகளைக் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் போராடி வரும் நிலையில், இந்தத் தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி குறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், “இந்த முடிவுகள் மூலம், ஒரு வருடத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை எதிர்க்கட்சிகள் தெரிந்துகொண்டிருக்கும்” எனக் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா.சிதம்பரம், "பஞ்சாப் விவசாயிகளுக்கு வாக்குரிமை இருக்கிறது என்பதை மத்திய அரசு மறந்துவிட்டது. நாங்கள் இருக்கிறோம், வாக்களிப்போம் என்று மோடி அரசுக்கு நினைவுபடுத்திய பஞ்சாப் வாக்காளர்களுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT