ADVERTISEMENT

''நாடு முழுவதும் தங்குதடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வேண்டும்'' - பிரதமர் மோடி உத்தரவு!

04:52 PM Apr 22, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட கரோனா பரவும் வேகம் அதிகமாக உள்ளது. கரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்று (21.04.20210) ஒரேநாளில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 835 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. ஒரேநாளில் மூன்று லட்சம் பேருக்கு கரோனா உறுதியாவது இந்தியாவில் இது முதல்முறையாகும்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், உறவினர்களே அவற்றை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து கொடுக்கின்றனர். அப்படியிருந்தும், பல இடங்களில் தட்டுப்பாடு இருப்பதால், ஒவ்வொருவரும் ‘மூச்சை’க் கையில் பிடித்துக் கொண்டு, உயிருக்குப் போராடி வருகின்றனர்.

நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில் நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இன்று மத்திய அரசின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவி வரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக ஸ்டீல் உள்ளிட்ட முக்கியத் தொழிற்சாலைகளில் பயப்படுத்தக்கூடிய ஆக்சிஜனை உடனடியாக மருத்துவ சேவைக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்தந்த ஆலைகளில் உடனடியாக ஆக்சிஜன் உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். ரயிலில் ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்டுசெல்வது, தேவை அதிகமிருக்கும் பட்சத்தில் ஹெலிகாப்டர், விமானத்தில் ஆக்சிஜனை கொண்டுசெல்வது போன்றவற்றில் ஈடுபடுங்கள். மொத்தத்தில் நாடு முழுவதும் தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க வேண்டும். ஆக்சிஜன் தேவை அதிகமுள்ள 20 மாநிலங்களுக்கு நாள் ஒன்றுக்கு 6,785 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT