செருப்பு காலால் கழுத்தில் மிதிக்கும் முதலாளி... கதறி துடிக்கும் ஊழியர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த செக்யூரிட்டி போர்ஸ் என்னும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் சலீம்கான். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ஊழியர்கள் இருவரை மாறிமாறி செருப்பு காலால் மிதிக்கும் வீடியோ பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது. அவர்கள் இருவரும் என்ன தவறு செய்தார்கள் என்பது தெரியவில்லை என்றாலும், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன் என ஒருவர் கெஞ்ச, மற்றொருவர் நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அடித்துக்கொள்ளுங்கள். ஆனால் எனக்கு எதுவும் தெரியாது என்று கூறுகிறார்.

ஆனால் சலீம்கான் இருவரையும் காலால் உதைத்து அடிக்கிறார். தொடர்ந்து கீழே இருக்கும் மற்றொரு ஊழியரின் கழுத்தில் ஏறி பலமாக மிதிக்கிறார். எதுவும் செய்யமுடியாத அந்த ஊழியர் அப்படியே தரையில் படுத்துத் துடிக்கிறார். மற்றொரு ஊழியரின் கழுத்திலும், முகத்திலும் ஷூ காலால் மிதித்து சலீம்கான் ஏறிக் குதிக்கிறார். சலீம்கானின் இந்தக் கொடூரச் செயல் கடந்த இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பெங்களூருவைச் சேர்ந்த நியூஸ் 9 என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது.

attack
இதையும் படியுங்கள்
Subscribe