/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgjngc.jpg)
இன்றைய ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் கலந்துகொண்டது, மதச்சார்பின்மை தோல்வியடைந்துள்ளதைக் காட்டுவதாக ஒவைஸி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தலைவர் கோபால் தாஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பிரதமர் இந்த விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என ஆரம்பம் முதலே வலியுறுத்திவந்த ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி, இன்று விழாவில் பிரதமர் கலந்துகொண்டதைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டியதன் மூலம் தனது பதவியேற்பு உறுதி மொழியை மீறியுள்ளார் பிரதமர். இன்றைய தினம் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மை தோல்வியடைந்த நாள். இந்துத்துவாவின் வெற்றி தினம்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)