Advertisment

அசாதுதீன் ஒவைசி பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு?

OWAISI

உத்தரப்பிரதேச மாநிலத்தில், இம்மாதம் 10 ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம்7 ஆம்தேதி வரை சட்டமன்ற தேர்தல் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில்உத்தரப்பிரதேசத்தின்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு திரும்பியஅசாதுதீன் ஒவைசி, தனது கார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாககுற்றஞ்சாட்டியுள்ளார்.

Advertisment

உத்தரப்பிரதேசத்தின் கிதாரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டபின்னர் டெல்லி செல்லும் வழியில்,சஜர்சி சுங்க சாவடிஅருகே இரண்டு பேர் தனது வாகனத்தை நோக்கி 3-4 ரவுண்டுகள் சுட்டதாகவும், தனது வாகனம் பஞ்சர் ஆகி விட்டதாகவும், இதனையடுத்துவேறு வாகனத்தில் சென்றுவிட்டதாகவும்கூறியுள்ளார்.

Advertisment

மேலும் தன் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்திய குழுவில் மூன்று-நான்கு பேர் இருந்ததாகவும் ஒவைசி தெரிவித்துள்ளார். இதனையடுத்துகாவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தன் வாகனத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஒவைசிகூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi uttarpradesh owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe