Advertisment

ரஜினிகாந்திற்கு ஒவைசியின் சரமாரி கேள்விகள்..

சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் அமித்ஷாவும் கிருஷ்ணர், அர்ஜுனன் போன்றவர்கள் என தெரிவித்திருந்தார்.

Advertisment

owaisi questions rajinikanth

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரவேற்று பேசிய ரஜினி இந்தக் கருத்தை கூறினார். இந்நிலையில் ரஜினியின் இந்த கருத்தை விமர்சித்துள்ள எம்.ஐ.எம். கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி, "மோடியும், அமித்ஷாவும் அர்ஜுனர், கிருஷ்ணர் என்று சொல்கிறார் ரஜினிகாந்த். அப்படியானால் பாண்டவர்கள் யார்? கவுரவர்கள் யார் ? மீண்டும் ஒரு மகாபாரதப் போர் நடக்க வேண்டும் என ரஜினி விரும்புகிறாரா? மத்திய அரசு அதிகாரத்தை விரும்புகிறது. நீதியை விரும்பவில்லை. அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்பது மட்டுமே பாஜகவினரின் விருப்பம்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

owaisi rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe