Advertisment

"வாய் பேசாதீர்கள்...டெல்லிக்கு செல்லுங்கள்.." - மத்திய அமைச்சருக்கு ஓவைசி அட்வைஸ்!

கடந்த ஜனவரி 10- ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லியில் மிகத்தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஷாஹீன் பாக் பகுதியில் கடந்த 70 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்களும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் பேரணி நடத்தினார்கள். அதில் இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டு வாகனங்கள் மற்றும் பொதுச் சொத்துக்கள் தீவைக்கப்பட்டன.

Advertisment

இதனையடுத்து அங்கு பதட்டமான சூழல் உருவாகியது. இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த வகையான தாக்குதல் அங்கு தொடர்ந்து வரும் சூழலில், இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த கலவரம் தொடர்பாக ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார். அதில் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை குறிப்பிட்டுள்ள அவர், " தில்லியில் வன்முறை நடந்துகொண்டு இருக்கின்றது, நீங்கள் ஹைதராபாத்தில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள், உடனே டெல்லி செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

Advertisment

owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe