Advertisment

காங்கிரஸ் இஸ்லாமியத் தலைவர்களைக் கடுமையாக விமர்சித்த ஒவைஸி...

owaisi about congress leaders

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இஸ்லாமியத் தலைவர்கள், அக்கட்சியில் இருந்துகொண்டு நேரத்தை வீணடிப்பதாக ஒவைஸி விமர்சித்துள்ளார்.

Advertisment

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சோனியா காந்தி தலைமையில் இன்று (24/08/2020) காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் காரிய குழுக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisment

ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ள நிலையில், சோனியா காந்தியே தொடர வேண்டும்என கபில் சிபல், சசிதரூர், குலாம் நபி ஆசாத், பிருத்விராஜ் சவுகான், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தனர். மேலும் நேரு குடும்பத்தை அல்லாத ஒருவர் தலைவராக நியமிக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினர் வலியுறுத்தினர்.

இந்நிலையில் காரிய குழுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜகவுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகவும், மருத்துவமனையில் சோனியா இருந்தபோது கடிதம் எழுதலாமா? என்றும் கேள்வி எழுப்பியதாகச் செய்திகள் வெளியானது. ஆனால் ராகுல் காந்தி தரப்பில் இந்தத் தகவல் மறுக்கப்பட்ட நிலையில், இதனை மேற்கோள்காட்டி ஒவைஸி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், "குலாம் நபி ஆசாத் எங்களை பாஜகவின் 'பி' டீம் என்று அழைப்பார். தற்போது அவரது கட்சியின் முன்னாள் தலைவரே, கடிதத்தில் கையெழுத்திட்டதால் பாஜகவுடன் ரகசியக் கூட்டு வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியிலிருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைவர்கள், காங்கிரஸ் தலைமையின் கீழ் எத்தனை நாள்களுக்கு அடிமையாக இருப்பது என்று சிந்திக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

Rahul gandhi congress owaisi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe