Over-reels are a craze; Condemned husband case

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட மனைவியை கணவர் கண்டித்ததால் மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

பீகார் மாநிலம் பெகுசாராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ்வரகுமார். இவருடைய மனைவி ராணி குமாரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சமூகவலைத்தள பக்கங்களில் அதிக ஆர்வம் கொண்ட ராணி குமாரி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். பாடல்களுக்கு நடனமாடி விதவிதமான உடைகளில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.

Advertisment

அவருடைய பக்கத்தில் மொத்தம் ஒன்பதாயிரம் ஃபாலோயர்கள் உள்ளனர். மொத்தம் இதுவரை 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை பதிவேற்றியுள்ளார். ஆனால் மனைவி தொடர்ந்து இப்படி ரீல்ஸ் வீடியோக்களை நடனமாடியபடி வெளியிடுவது கணவன் மகேஷ்வரகுமாருக்கு பிடிக்காமல் போனது. இது தொடர்பாக அடிக்கடி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் இன்ஸ்டா பக்கத்தில் இனிமேல் ரீல்ஸ் வீடியோ வெளியிடக்கூடாது என மகேஷ்வரகுமார் கடுமையாக எச்சரித்துள்ளார்.

இதனிடையில் மீண்டும் மனைவி ராணி குமாரி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் நேற்று இருவருக்கும் தகராறு முற்றியுள்ளது. அப்பொழுது ராணி குமாரி அவரின் குடும்பத்தினருடன் சேர்ந்து கணவர் மகேஷ்வரகுமாரை கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக மகேஷ்வரகுமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரையடுத்து விசாரணை செய்த போலீசார் ராணி குமாரி மற்றும் அவரது உறவினர்களை கைது செய்தனர். ரீல்ஸ் மோகத்தில் கணவனையே பெண் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment