ADVERTISEMENT

மூன்று மாதங்களில் நாட்டின் நிலுவைத் தொகை ரூ. 1.37 கோடி இலட்சமாக உயர்வு

10:50 AM Mar 09, 2019 | tarivazhagan

நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசுக்கு வரவேண்டிய பொது நிலுவைத்தொகை 89.5 சதவீதமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாட்டின் மொத்த கடன் தொகை நடப்பு நிதியாண்டின் முன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ரூ. 83.40 இலட்சம் கோடியாக உள்ளதென நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.82.03 இலட்சம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலாண்டு என்பது மூன்று மாதங்கள். நிதிஅமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி பார்த்தால், மூன்று மாதங்களில் நாட்டின் கடன் தொகை ரூ. 1.37 கோடி இலட்சமாக உயர்ந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT