காணாமல் போன பாதுகாப்பு படை வீரர் - புகைப்படத்தை வெளியிட்ட மாவோயிஸ்டுகள்!

MISING PERSONNEL

சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் (Central Reserve Police Force), ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் (Special Task Force), மாவட்ட சிறப்புப் பாதுகாப்பு படையினர், கமாண்டோ பட்டாலியன் ரெசலூட் ஆக்சன் (Commando Battalion for Resolute Action) ஆகிய பிரிவைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் இணைந்து மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில், கடந்த 03/04/2021 அன்று, அதிரடியாக ஈடுபட்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த வீரர்கள் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ஒரு பாதுகாப்பு படைவீரரை காணவில்லை. அவரைமாவோயிஸ்டுகள் கடத்திச் சென்றிருக்கலாம் எனக்கருதப்பட்டது. அந்த வீரரை தேடும் பணியும் நடைபெற்று வந்தது. இந்தநிலையில்காணாமல் போன வீரரைதாங்கள் சிறைபிடித்திருப்பதாகவும், வீரரை விடுவிக்க மத்தியஸ்தரை அறிவிக்க வேண்டும் எனவும் மாவோயிஸ்டுகள் பெயரில் அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையின் உண்மைத் தன்மைகுறித்து ஆராயப்படுவதாகசத்தீஸ்கர் மாநில, மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இந்தநிலையில், தற்போது மாவோயிஸ்டுகள் வெளியிட்டதாக, பாதுகாப்பு படை வீரரின்புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் காணாமல் போன இராணுவவீரர்தான்எனசி.ஆர்.பி.எஃப் வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. மேலும் இதுதொடர்பாகஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள்தெரிவித்துள்ளன.

chhattisgarh cobra Security
இதையும் படியுங்கள்
Subscribe