ott platforms under government guidance

Advertisment

ஆன்லைன் செய்தி இணையதளங்கள், செய்தி ஏஜென்சிகள் மற்றும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகியவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு.

நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியாகும் சில படைப்புகள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், தவறான கருத்துகளை முன்வைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. இந்தச் சூழலில், ஆன்லைன் செய்தி இணையதளங்கள், செய்தி ஏஜென்சிகள் மற்றும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் ஆகியவற்றை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரும் உத்தரவு ஒன்றை மத்திய அரசு பிறப்பித்தது. இதில் இன்று குடியரசுத்தலைவர் கையெழுத்திட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆன்லைன் செய்தி இணையதளங்கள் மற்றும் OTT போன்றவை இனி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கண்காணிப்பில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.