மோடியின் பணமதிப்பிழப்புக்கு பிறகு கேரளாவில் ஒரு டீக்கடைக்காரன் பட்ட கஷ்டங்களை ஆவணப்படமாக மலையாளத்தில் தயாரித்தனர். அந்த ஆவணப்படத்தை 73 வயதான சானு கும்மில் இயக்கியிருந்தார். இந்தப்படத்தை டெல்லியில் உள்ள கேரளா கிளப்பில் திரையிடத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், காவி அமைப்புகளைச் சேர்ந்த சிலரின் மிரட்டல் காரணமாக திரையிடாமல் தவிர்க்கப்பட்டது.

Advertisment

tea kadai

Advertisment

நாட்டின் பொருளாதார சீர்குலைவை இந்த ஆவணப்படம் விவாதிப்பதால் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறது. யாஹியா என்ற சாயாக்கடைக்காரர் தன்னிடமிருந்த 23 ஆயிரம் ரூபாயை பணமதிப்பிழப்பு சமயத்தில் மாற்ற முடியாமல் தீவைத்து கொளுத்துகிறார். தனது தலையையும் பாதியாக மொட்டை அடித்துக்கொள்கிறார் என்று இந்தத் திரைப்படம் காட்சிப்படுத்துகிறது.

இந்த திரைப்படத்துக்கு விடுக்கப்பட்ட மிரட்டலைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சங்கம் தலையிட்டு, திரைப்படத்தை திரையிட உதவுவதாக கூறியுள்ளது. இதுபோல ஏற்கெனவே பலமுறை இந்தத் திரைப்படம் தடங்கல்களை சந்தித்துள்ளது.