ADVERTISEMENT

கணினிகளில் பதிவாகியுள்ள தகவல்களை கண்காணிப்பது தனிமனிதர்களின் சுதந்திரத்தை பாதுகாக்கவே - மத்திய அரசு

04:14 PM Mar 04, 2019 | tarivazhagan

மத்திய அரசு கடந்த 2018 டிசம்பர் மாதம் 20ஆம் தேதி தேசிய புலானய்வு அமைப்பு, சிபிஐ, ரா, மத்திய உளவுத்துறை, டெல்லி கமிஷ்னர், அமலாக்க துறை, மத்திய நேரடி வரிகள் ஆணையம், வருவாய் புலனாய்வு அமைப்பு உள்ளிட்ட பத்து நிறுவனங்களுக்கு மக்களின் கணினி தகவல்களை கண்காணிக்கலாம் என அறிவிக்கை வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து பல்வேறு தரப்புகளில் இருந்தும் இந்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. அதன்பின் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் இந்த அறிவிக்கை தனிமனித சுதந்திரத்திற்கான உரிமையை மீறுவதாக கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாராணை சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அதில் பதில் அளித்த மத்திய அரசு, “இந்த அறிவிக்கை தகவல்தொழில்நுட்ப சட்டம் 2000த்தின் பிரிவு 69ன்படி மற்றும் தகவல்தொழில்நுட்ப விதிகளில் நான்காவது விதியின்படியும்தான் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிக்கையின் வாயிலாக அரசின் கண்கானிப்பு அதிகாரம் குறைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த அறிவிக்கை 10 நிறுவனங்களுக்கு மட்டும் தான் கண்காணிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது.

இதில் இடம்பெறாத வெறு எந்த அமைப்பும் மக்களை கண்காணிக்க முடியாது. அத்துடன் எந்த அமைப்பு தனிச்சையாக மக்களின் தகவல்களை கண்காணிக்க முடியாது. அவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவேண்டும். அதேசமயம் பயங்கரவாதிகளால் நாட்டிற்கு அச்சுறுதல்கள் உள்ளதால் அவர்களை கட்டுபடுத்த அரசிற்கு தகுந்த புலானய்வு தரவுகள் தேவைப்படுகின்றன. இதனால் விரைவில் முடிவுகளை எடுப்பதற்கு ஒரு அரசு அதிகாரம் தேவைப்படுகிறது. இதை மேற்பார்வை செய்ய மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமயில் குழு அமைக்கப்பட்டுள்ளதால் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT