
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பாமக சார்பில் வன்னியர் சங்கத்தின் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ வரும் நாளை (11-05-25) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பா.ம.க தீவிரமாக மேற்கொண்டு வருகின்ற நிலையில், இதற்கான அழைப்பிதழை பல்வேறு பிரபலங்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்த மாநாட்டில் ஏராளமானோர் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், சித்திரை பவுர்ணமி பா.ம.க இளைஞர் மாநாட்டை ஒட்டி, புதுச்சேரியில் மதுபானக் கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், ‘மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை பெளர்ணமி இளைஞர் மாநாடு காரணமாக பொது அமைதியை பேணுவதற்கான தடுப்பு நடவடிக்கையாக புதுச்சேரி பகுதியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகள், பார்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் உள்பட அனைத்து மதுபானக் கடைகளும் 11-05-25 அன்று மதியம் 1 மணி முதல் முதல் மூடப்படும்’ என அறிவுறுத்தப்படுகிறது.