Opposition slogans in the Lok Sabha

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று முதல் வரும் 22 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நாளை(18.9.2022) முதல் 22 ஆம் தேதி வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற செய்தி இதழியில் விளக்கமளித்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன.

Advertisment

இதையடுத்து நாடுமுழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா தொடர்பாக மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “சில நாட்கள் மட்டுமே நடத்தாலும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. இக்கூட்டத்தொடர் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகளை எடுக்கக்கூடியதாக அமையும்” எனத்தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர் தொடங்கியவுடன் சபாநாயகர் ஓம் பிர்லா இந்தியாவில் ஜி 20 மாநாடு நடத்தி முடித்ததற்காகப் பிரதமருக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். மேலும், பழைய கசப்பான விஷயங்களை மறந்து இந்த கூடத்தொடருக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று பேசினார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் மைக் அணைத்து வைக்கப்பட்டதாகப் புகார் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.