Skip to main content

உத்தவ் தாக்கரே எடுத்த முடிவால் எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி

Published on 12/07/2022 | Edited on 12/07/2022

 

Opposition parties shocked by Uddhav Thackeray's decision

 

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா கட்சி முடிவெடுத்துள்ளது.

 

ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இரு வேட்பாளர்களும் தங்களது ஆதரவாளர்களை தொடர்ச்சியாகச் சந்தித்து ஆதரவு கோரிவருகின்றனர். எதிர்கட்சிகளின் வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவாக சிவசேனா வாக்களிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய திருப்பமாக திரௌபதி முர்முவுக்கு ஆதரவளிக்க சிவசேனா முடிவெடுத்துள்ளது. சிவசேனா எடுத்துள்ள இந்த முடிவானது மகாராஷ்டிராவில் உள்ள மகா விகாஸ் அகாடி கூட்டணியின் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் இந்த திடீர் முடிவு எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"தகுதி நீக்க மனுக்களில் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது"- உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு! 

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

"Speaker should not take any decision on disqualification petitions"- Supreme Court judges order!

 

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான தரப்புக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. 

 

சிவசேனாவின் 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதேவேளையில் சிவசேனாவின் அதிக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தான் உள்ளனர் என்றும், ஆகவே உத்தவ் தாக்கரே ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, உத்தவ் தாக்கரே தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபல், ஏக்நாத் ஷிண்டே தரப்பு வழக்கை எற்றுக் கொண்டால், நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அரசையும் கவிழ்க்க முடியும் என்பதாகிவிடாதா என வினவினார். அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் தடை இருந்தும், மாநில அரசுகளை கலைக்க முடியும் எனில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்றும் கபில்சிபல் வாதிட்டார். 

 

இரு தரப்பு மனுக்களில் பல பிரச்சனைகள் இருப்பதால், அவற்றை ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வுக்கு பரிந்துரைச் செய்ய வேண்டி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை, சட்டப்பேரவையின் சபாநாயகர் தற்போதைய நிலையைப் பேணுவார் என்றும், தகுதி நீக்க மனுக்களில் அவர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், அனைத்து ஆவணங்களையும் பத்திரமாக வைக்குமாறு மகாராஷ்டிரா சட்டப்பேரவைச் செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்குகள் மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

 

Next Story

அரசு இல்லத்தை காலி செய்தார் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே! 

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

Chief Minister Uttam Thackeray vacates government house

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் இருந்து 48 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அசாமில் முகாமிட்டுள்ளனர். இதனால் சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா விகாஸ் அகாதி ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று (23/06/2022) மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத், "ஆளும் கூட்டணியில் இருந்து தங்கள் கட்சி விலகவும் தயார்; ஆனால் அசாமில் உள்ள அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள், உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்துப் பேச வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

 

இதனிடையே, கவுகாத்தியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த ஏக்நாத் ஷிண்டேவை நேரில் சந்தித்த சிவசேனா கட்சியைச் சேர்ந்த மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். 

 

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் எனக் கூறியிருந்த முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, 'வர்ஷா' என்றழைக்கப்படும் முதலமைச்சரின் அரசு இல்லத்தைக் காலி செய்து தனது சொந்த இல்லத்திற்கு சென்றார். இதனால் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.