Advertisment

டெல்லி எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட தமிழக எம்.பி.க்கள்!

mp

வேளாண் சட்டங்களுக்கு எதிராகவிவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்குப் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு, வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசுத் தலைவரின்உரையையும் புறக்கணித்தன. மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வேளாண்சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு அமளியில் ஈடுபட்டுவருகின்றனர்.

Advertisment

இந்நிலையில், போராடிவரும்விவசாயிகளை சந்திக்க, எதிர்க்கட்சி எம்.பி.க்களான கனிமொழி, திருமாவளவன், சு.வெங்கடேசன், ரவிக்குமார், திருச்சிசிவா,சுப்ரியா சுலே, ஹர்சிம்ரத் கவுர் பாதல் உள்ளிட்டோர் டெல்லியின் காசிப்பூர் எல்லைக்குப் பயணம் மேற்கொண்டனர். டெல்லி எல்லையை அடைந்தஅவர்களை, டெல்லி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

Advertisment

அதேநேரத்தில், காசிப்பூர் எல்லையில் தரையில்பதிக்கப்பட்டிருந்த ஆணிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் டெல்லிஎல்லைக்குச் சென்றுள்ள ஹர்சிம்ரத் கவுர் பாதல், "இந்தப் பிரச்சினையை (விவசாயிகளின் போராட்டம்) விவாதிக்கலாம் என்று நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இந்தப் பிரச்சினையை எழுப்ப அனுமதிக்கவில்லை. இப்போது அனைத்து கட்சிகளும் இங்கு என்ன நடக்கிறது என்பது குறித்த விவரங்களைத் தரும்" எனக் கூறியுள்ளார்.

farm bill Delhi Farmers thiruma valavan kanimozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe