Ghulam Nabi Azad

இந்தியநாடாளுமன்றத்தின் பட்ஜெட்கூட்டத்தொடர்நாளை தொடங்கவுள்ளது. வரும் பிப்ரவரி1 ஆம் தேதி பட்ஜெட்தாக்கல்செய்யப்படவுள்ளது. பட்ஜெட்கூட்டத்தொடரின் தொடக்க நாளானநாளை, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார்.

Advertisment

இந்தநிலையில் நாளை குடியரசுத் தலைவரின்உரையைப் புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், ஆம் ஆத்மிஉள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின்மூத்த தலைவர் குலாம்நபிஆசாத்,நாங்கள் 16 அரசியல் கட்சிகளிடமிருந்து அறிக்கையைவழங்குகிறோம். நாங்கள் நாளை நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றப்போகும் உரையைப் புறக்கணிக்கிறோம். இந்த முடிவிற்கான முக்கிய காரணம் வேளாண்மசோதாக்கள், எதிர்க்கட்சிகள் இல்லாமல், பலவந்தமாக நிறைவேற்றப்பட்டதுதான்" எனக் கூறியுள்ளார்.

"ஆம் ஆத்மி கட்சிஉறுப்பினர்கள் மூன்று கறுப்புவேளாண் சட்டங்களுக்கு எதிராகப்போராடினர். தொடர்ந்து போராடுவார்கள்.அதனால்தான் ஆம் ஆத்மி குடியரசுத் தலைவரின் உரையைப் புறக்கணிக்கும். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு நாங்கள் தொடர்ந்து கோருகிறோம். வேளாண்சட்டங்கள் விவசாயிகளின் மரணத்திற்கான ஆணையில்போடப்பட்டகையெழுத்தாகும்" எனஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

Advertisment