Operation vidiyal rowdies homes raid police

புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் 'ஆபரேஷன் விடியல்' என்ற பெயரில் ஒவ்வொரு காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீடுகளில் வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் ஏதாவது பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என சோதனை செய்து, அவர்கள் தற்போது குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனரா அல்லது குற்றவாளிகளுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்களா எனவும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Operation vidiyal rowdies homes raid police

குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.