உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 74,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைதங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்தியா முழுவதும் இதனால் மதுக்கடைகள் மூடியிருந்த நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கு முடிந்த நிலையில் சில மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் கடந்த 7ம் தேதி மதுக்கடைகளை போலிஸ் பாதுகாப்போடு தமிழக அரசு திறந்தது. இரண்டு நாட்கள் திறந்திருந்த மதுக்கடைகளை, தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் மூடியது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்நிலையில் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகள் திறக்கப்படாது என்று அறிவித்திருந்த கேரள அரசு இன்று கள்ளுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக 50 நாட்களுக்கு பிறகு இன்று கள்ளுக்கடைகள் திறக்கப்பட்டன. தனி மனித இடைவெளியோடு ஒரு ஆளுக்கு 1.5 லிட்டர் கள் பார்சல் மட்டும் வழங்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.