2025ம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா (23) என்பவர் வென்றுள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் ஓபல் சுசாட்டாக்கு உலக அழகி மகுடம் சூடப்பட்டது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் 2025க்கான இறுதி போட்டிக்கான நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை குஷ்பூ இது குறித்து கூறுகையில், “இந்த நிகழ்வு எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் உலகின் அழகான பெண்களைப் பற்றி நாம் பேசும்போது, இந்தியப் பெண்கள்தான் உலகின் மிக அழகான பெண்கள் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.இந்த நிகழ்வு இந்த நாட்டில் நடப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.