Advertisment

இனி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் மட்டுமே - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

ambedkarr

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர், மாநில முதல்வர்களின் படங்கள் இருப்பது வழக்கமான விஷயமாகும். இந்தநிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisment

குடியரசு தினத்தையொட்டி இன்று நடைபெற்ற நிகழ்வில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசு அலுவலகங்களில் இனி முதலமைச்சர்கள் படமோ, அரசியல்வாதிகளின் படமோமாட்டப்படாது எனவும், அரசு அலுவலகங்களில் இனி அம்பேத்கர் படமும், பகத்சிங் படமும் மட்டுமே மாட்டப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisment

பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் ஆகியோரால் தான் மிகவும் உந்தப்பட்டதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

ambedkar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe