Advertisment

கல்லா நிறைய பணம்... ஆனாலும் வெங்காயத்தை திருடிச் சென்ற திருடர்கள்!

இந்தியா முழுவதும் வெங்காய விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், வெங்காயம் அதிக விலைக்கு கிடைப்பதே தட்டுப்பாடான நிலையில் உள்ளது. குறிப்பாக வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பொழிந்த அதிக மழைபொழிவால் வெங்காய விளைச்சலும், அதனைத் தொடர்ந்து விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில், கொல்கத்தாவில் சுடகாட்டா பகுதியில் வெங்காய கடையில் புகுந்த மர்ம நபர்கள், கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்தும், அதில் இருந்த பணத்தை அப்படியே வைத்துவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டையை திருடிச் சென்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெங்காயத்தை போலவே இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்டவற்றையும் அவர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

Advertisment

onion
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe